உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் செவிலியர் தின பேரணி

ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் செவிலியர் தின பேரணி

கோவை:ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், செவிலியர் தின பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் மே 12ம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இந்தாண்டு செவிலியர் தினத்தை முன்னிட்டு, ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், 'நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் - கவனிப்பின் பொருளாதார சக்தி' என்ற கருப்பொருளுடன் செவிலியர் தின பேரணி, நேற்று ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டது.பேரணியை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, முதன்மை செயல் அலுவலர் சுவாதி ஆகியோர், கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.இதில் ராமகிருஷ்ணா மருத்துவமனையை சேர்ந்த சுமார், 200 செவிலியர்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை