| ADDED : ஜூன் 18, 2024 12:36 AM
கோவை;பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஆகியோரது புகைப்படத்துடன் கூடிய செய்தியுடன், ஆபாச வார்த்தைகளை 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் பா.ஜ., மகளிரணியினர், நேற்று புகார் மனு அளித்தனர்.பின்னர், பா.ஜ., மகளிரணி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ கூறுகையில், ''சமூக விரோதிகள் இவ்வாறு பதிவிடுவது, தொடர்ச்சியாக நடந்துகொண்டே உள்ளது. இதுவே பா.ஜ.,வினர் செய்தால் பெண்கள் என்றும் பார்க்காமல், இரவில் கைது செய்கின்றனர்.ஆனால், இதுபோன்ற பதிவுக்கு யாரும் கேள்வி கேட்பதில்லை. இதற்கு தீர்வு கிடைக்கவில்லையேல், ஆர்ப்பாட்டம் நடத்துவோம்,'' என்றார்.பா.ஜ., வழக்கறிஞர் அணியை சேர்ந்த வெண்ணிலா கூறுகையில், ''எக்ஸ் வலைதளத்தில் 'எதிசுந்தர்' என்கிற நபர், பொய்யான முகமூடி அணிந்து ஆபாசமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையேல், நீதிமன்றத்தை அணுகுவோம்,'' என்றார்.