உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா வாலிபர் கைது

கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா வாலிபர் கைது

கோவில்பாளையம்; கோவில்பாளையத்தில் 360 கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை புறநகரில், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது குறித்து சிறப்பு சோதனை நடத்த கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு எஸ்.ஐ., ஜேம்ஸ் மற்றும் போலீசார், நேற்று கோவில்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.இதில் வாத பிள்ளையார் கோவில் எதிரே, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுனந்தா சாகு, என்பவர், 360, கஞ்சா சாக்லெட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி