உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்கள் கண்டு கொள்ளாத அதிகாரிகள்

அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்கள் கண்டு கொள்ளாத அதிகாரிகள்

அன்னுார்:அன்னுார் தாலுகாவில், அனுமதி இன்றி, அதிக அளவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றமும், தமிழக அரசும், மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில், விளம்பர பலகைகள் வைப்பது குறித்து பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளன.நெடுஞ்சாலையிலிருந்து எவ்வளவு மீட்டர் தள்ளி அமைக்க வேண்டும். விளம்பர பலகைகளின் நீளம் மற்றும் உயரம் குறித்து, பல்வேறு விதிமுறைகளை வகுத்து தெரிவித்துள்ளன.அன்னூரில் பயணியர் மாளிகை முன்புறம், அதிக அளவில் நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறாத பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இதேபோல், கரியாம்பாளையம் நான்கு ரோடு சந்திப்பு, பிள்ளையப்பம்பாளையம் சாலையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கணேசபுரம் பஸ் ஸ்டாப் எதிர்ப்புறம், வரிசையாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் அருகே அனுமதியில்லாத பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.கோவை சத்தி சாலையில், குரும்பபாளையத்தில், அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. விதிமீறில்லை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ