உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுகளுக்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் சப்ளை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

வீடுகளுக்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் சப்ளை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

கோவில்பாளையம்:கொண்டையம்பாளையம் மற்றும் அத்திப்பாளையம் ஊராட்சிகளில், சரியாக சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தவை கொண்டையம்பாளையம் மற்றும் அத்திப்பாளையம் ஊராட்சிகள். இந்த ஊராட்சிகளில் கொண்டையம்பாளையம், கோட்டைப்பாளையம், லட்சுமி கார்டன், வையம் பாளையம், அத்திப்பாளையம் பகுதியில் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அத்திக்கடவு திட்டத்தில் இங்கு வீடுகளுக்கும், பொதுக்குழாய்களிலும் நீர் வழங்கப்படுகிறது.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'வீட்டுக்கு சப்ளையாகும் நீரில் பிடித்து வைத்த சில நாட்களிலேயே புழு உருவாகி விடுகிறது. ஒரு வித வாசம் அடிக்கிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திலும் பலமுறை புகார் தெரிவித்து விட்டோம். சுத்திகரிக்கப்படாமல் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடித்தால் போர்வெல் நீர் போல் உள்ளது,' என்றனர்.கொண்டையம் பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில்,' ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,' என்றார். அத்திப்பாளையம் ஊராட்சி தலைவர் சுபத்ரா புருஷோத்தமன் கூறுகையில், 'ஊராட்சியில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி அதிகரித்துள்ளது. எனவே குடிநீரை முழுமையாக குளோரினேஷன் செய்து வழங்கும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஒரு லட்சம் லிட்டருக்கு 400 கிராம் குளோரின் கலந்து வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.ஏற்கனவே குடிநீர் வடிகால் வாரியம் ஒரு முறை குளோரினேஷன் செய்து எங்களுக்கு வழங்குகிறது. எங்கள் ஊராட்சி மேல் நிலை தொட்டிக்கு வந்த பிறகு நாங்கள் ஒரு முறை குளோரினேஷன் செய்கிறோம். இதனால் சுவை சற்று மாறுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் மட்டுமே மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை