| ADDED : ஜூலை 24, 2024 12:48 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கில், இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரியில், வணிகவியல் துறை சார்பில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவியுடன் 'டிஜிட்டல் மாற்றம் வாயிலாக இந்தியாவை மேம்படுத்துதல்; நிலையான அணுகுமுறை' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மாணிக்கசெழியன் துவக்கி வைத்தார். கல்வியியல் இயக்குநர் சரவணபாபு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறைத்தலைவர் பிருந்தா ஆகியோர் பேசினர். ைஹதராபாத் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் கவுரவ இயக்குநர் சுதாகர்ரெட்டி பங்கேற்றார்.தொடர்ந்து, ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி வணிக மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியர் வானதி, 'உலகில் உள்ள டிஜிட்டல் உருமாற்ற முயற்சியில் கற்றல்', ஈரோடு சிக்கய்யா நாயக்கர் கல்லுாரி வணிக நிர்வாகத் துறை உதவிப் பேராசிரியர் ஜமுனா, 'டிஜிட்டல் இந்தியா', கோவை குமரகுரு லிபரல் கலை கல்லுாரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் ஸ்ரீதேவி, 'இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் பேசினர்.வணிகவியல் துறைத்தலைவர் சத்தியபாமா, பொறுப்பாளர் மாணிக்கசெழியன், டீன் -ஆராய்ச்சி டாக்டர் உமாபதி, ஐ.க்யூ.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மேலாளர் ரகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கு இயக்குநர் இந்திராபிரியதர்ஷினி நன்றி கூறினார்.