உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாதம் ஒருவர் சிறந்த ஊழியராக தேர்வு

மாதம் ஒருவர் சிறந்த ஊழியராக தேர்வு

கோவை:சேலம் ரயில்வே கோட்டத்தில் பணிபுரிவோரில், மாதம் ஒருவர் சிறந்த ஊழியராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கவுரவிக்கப்படுகிறார். இது, ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுஇருக்கிறது.தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களை உபயோகிக்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனை பராமரிப்பது; பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பது இமாலய வேலை.அதனால், பயணிகளின் தேவையை உணர்ந்து, கோவை ரயில்வே ஸ்டேஷனில் படிப்படியாக வசதிகள் மேம்படுத்தப்பட்டுவருகின்றன.சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களில், மாதம் ஒருவரை தேர்வு செய்து, 'சிறந்த ஊழியர்' என பட்டம் வழங்கி, கவுரவிக்கப்படுகிறது.அவர்களது புகைப்படத்துடன் எந்த பிரிவை சேர்ந்த ஊழியர் என குறிப்பிட்டு, பிளக்ஸ் அச்சடித்து, பயணிகள் அறியும் வகையில், நடைமேடையில் வைக்கப்படுகிறது.கோவை ரயில்வே ஸ்டேஷனில் முதலாவது நடைமேடையில் ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அருகில், கடந்த மே மாதத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஊழியர், தகவல் தொடர்பு துறை தொழில்நுட்பவியலாளர் நிலை-3 வினோத் புகைப்படத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வாக்கியங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளின் இம்முயற்சி, ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ