உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூரில் அம்பலவாணர் நிலையம் திறப்பு

பேரூரில் அம்பலவாணர் நிலையம் திறப்பு

தொண்டாமுத்தூர்: பேரூரில், புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ அம்பலவாணர் நிலையம் மற்றும் கோசாலையை, திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.பேரூரில், திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான பேரூர் தம்பிரான் தோப்பில், புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ அம்பலவாணர் நிலையம் மற்றும் கோசாலை திறப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையேற்று, ஸ்ரீ அம்பலவாணர் நிலையம் மற்றும் கோசாலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, கச்சியப்ப முனிவர் அருளிய 'பேரூர் புராணம்' என்ற நூலை, 50 ஆண்டுகளுக்குப்பின் மறுபதிப்பு செய்து வெளியிட்டனர். மறுபதிப்பு செய்த பேரூர் பெரியபுராணம் நூலை, திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட, காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் வள்ளுவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அதன்பின், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இவ்விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை ஆதினம் முத்துசிவராமசாமி அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்