உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதாரமின்றி அரசு பஸ்கள் இயக்கம்; கூடுதல் பணியாளர்கள் அவசியம்

சுகாதாரமின்றி அரசு பஸ்கள் இயக்கம்; கூடுதல் பணியாளர்கள் அவசியம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பணியாளர்கள் பற்றாக்குறையால், அரசு பஸ்கள் சரிவர சுத்தம் செய்யப்படாமல் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட, அரசு போக்குவரத்து கழகத்தின் நான்கு பணிமனைகளில் இருந்து, 270க்கும் மேற்பட்ட தொலைதுார மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.அவ்வகையில், 'டிரிப்' முடித்து பணிமனையில் நிறுத்தப்படும் பஸ்களை, சுழற்சி அடிப்படையில், தினமும் ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும். வெளியூரில் நிறுத்தப்படும் பஸ்கள், டிப்போ வந்தவுடன் சுத்தம் செய்யப்படுகிறது. ஆனால், பஸ் சுத்தம் செய்யும் பணியில் எட்டு பேர் மட்டுமே உள்ளனர்.குறிப்பாக, ஒரு பணிமனையில், ஐந்து பேருக்கு, 2 பணியாளர்கள் மட்டுமே பணியில் இருப்பதால், பஸ்கள் முழுமையாக சுத்தம் செய்யப்படுவது கிடையாது. ஒரு பஸ்சுக்கு, 40 ரூபாய் மட்டுமே சம்பளம் தருவதால், பெயரளவுக்கு மட்டுமே சுத்தம் செய்யப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கூறியதாவது:ஒரு பஸ்சை சுத்தம் செய்ய, 3 முதல் 5 பேர் இருந்தால் மட்டுமே, ஓரளவு பளிச்சிடும். ஆனால், ஒவ்வொரு பணிமனைகளிலும், இருவர் மட்டுமே உள்ளனர். பஸ்களில் தினமும், பல்வேறு விதமான பொருட்கள், காய்கறிகளை பயணியர் எடுத்துச் செல்கின்றனர்.சிலர், தின்பண்டங்கள் சாப்பிட்டு, கழிவுகளை பஸ்சில் போடுகின்றனர். இதனால், குப்பை சேர்ந்து, துர்நாற்றம் வீசுகிறது. இது, மற்ற பயணியரை முகம் சுளிக்க வைக்கிறது. பஸ்சில் படிந்துள்ள அழுக்கு இருக்கைகளை பார்த்து, பலர் தனியார் பஸ்களை நாடுகின்றனர்.சரிவர சுத்தம் செய்யாத பஸ்களால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. போதிய ஊழியர்களை நியமித்து, பஸ்களை சுத்தம் செய்ய முன் வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி