உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பென்ஷன்தாரருக்கு காப்பீடு  தொகை வழங்க உத்தரவு

பென்ஷன்தாரருக்கு காப்பீடு  தொகை வழங்க உத்தரவு

பென்சன்தாரர் சிகிச்சை பெற்றதற்கான காப்பீடு தொகை வழங்க, நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்,63. ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது பென்சன் தொகையில், மருத்துவ காப்பீட்டிற்காக பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் 2023, மார்ச், 20 ல் சேர்க்கப்பட்டார். அவரது வலது காலில் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான செலவு தொகை, 1.71 லட்சம் ரூபாய் வழங்க கோரி, யுனைடெட் இண்டியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், மருத்துவ செலவிற்கான தொகையில், 50,343 ரூபாய் மட்டும் அவரது வங்கி கணக்கில் செலுத்தினர். ஐந்து லட்சம் ரூபாய் வரை, கிளைம் செய்ய நிர்ணயிக்கப்பட்டு இருந்தும், குறைவான தொகை வழங்கினர். முழு தொகை கேட்டு, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தல் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கியது போக, மீதி தொகையை திருப்பி செலுத்த வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை