உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.சி.,யில் காஸ் கசிவு இழப்பீடு வழங்க உத்தரவு 

ஏ.சி.,யில் காஸ் கசிவு இழப்பீடு வழங்க உத்தரவு 

கோவை, : ஆன்லைனில் வாங்கிய ஏ.சி.,யில் காஸ் கசிந்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை அருகேயுள்ள அசோக் நகரை சேர்ந்த சந்தோஷ், அமேசான் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், ஆன்லைன் வாயிலாக 2022, மே 9ல், ஒரு டன் எடை கொண்ட ஏ.சி., வாங்கினார். அதற்கான தொகை, 22,999 ரூபாயை, கிரெடிட் கார்டில் செலுத்தினார். ஏ.சி., பொருத்திய சில நாட்களில் சரியாக இயங்கவில்லை. மெக்கானிக் வந்து பார்த்த போது, காஸ் கசிவு காரணமாக இயங்காமல், அடிக்கடி பழுதானது தெரிய வந்தது. பழுதான ஏ.சி.,யை அமேசான் நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பினார். ஆனால், அதற்கு மாற்றாக புதிய ஏ.சி., அனுப்பி வைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட சந்தோஷ் இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'அமேசான் நிறுவனம், ஏ.சி.,க்கான தொகை, 22,999 ரூபாயை, மனுதாரருக்கு திருப்பி கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 25,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ