உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி பூங்காக்களில் பழுதடைந்த மின் ஒயர்களை சரி செய்ய உத்தரவு

மாநகராட்சி பூங்காக்களில் பழுதடைந்த மின் ஒயர்களை சரி செய்ய உத்தரவு

கோவை;மாநகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளிட்டவற்றில், பழுதடைந்த மின் ஒயர்களை சரிசெய்யவும், தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.சின்னவேடம்பட்டி அருகே அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில், விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள் சமீபத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சிறுவர் விளையாட்டு பூங்கா, முதியோர் பூங்கா என, 200க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்கள் பலவற்றில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து இருப்பதுடன், மின் ஒயர்கள் மோசமான நிலையிலும் காணப்படுகிறது.குழந்தைகள் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவற்றில் உள்ள பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்களும் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பராமரிக்கப்படுகின்றன.இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெற்கு, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில், நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, 'மோசமான நிலையில் இருக்கும் மின் ஒயர்களை உடனடியாக மாற்றி அமைப்பதுடன், தேங்கும் மழை நீரையும், முழுமையாக அகற்ற வேண்டும்' என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை