உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்

ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்

கோவில்பாளையம்;நான்கு ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வெள்ளானைப்பட்டி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார், வீரபாண்டி ஊராட்சிக்கும், அத்திப்பாளையம் ஊராட்சி செயலர் வீரமணி, அக்ரஹார சாம குளம் ஊராட்சி செயலராக மாற்றப்பட்டுள்ளார்.இரும்பறை ஊராட்சி செயலர் லட்சுமி நாராயணன், அத்திபாளையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வீரபாண்டி ஊராட்சி செயலர் சுப்பிரமணி வெள்ளானைப்பட்டிக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்பணிமாறுதல் தொடர்பாக, எந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணி மாறுதலை தவிர்க்கும் பொருட்டு, விடுப்பில் செல்வோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்