உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீ விபத்தில் கருகியது பந்தல் கடை

தீ விபத்தில் கருகியது பந்தல் கடை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவை சேர்ந்தவர் மகேந்திரன். இவர், சொக்கனூர் ரோடு சிக்கலாம்பாளையத்தில், பந்தல் மற்றும் ஸ்பீக்கர் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை வாடகைக்கு விட்டிருந்த ஸ்பீக்கர் மட்டும் ஜெனரேட்டர்களை வாங்க சென்றிருந்தார்.அப்போது, கடையில் மின்கசிவு ஏற்பட்டு, ஒயரில் தீப்பிடித்தது. இதில், கடையில் இருந்த பந்தல், சாமியானா, மின்விளக்குகள், ஸ்பீக்கர் பாக்ஸ்கள் மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள் என அனைத்தும், தீப்பிடித்து எரிந்தது.அங்கிருந்தவர்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை