உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்ரகாளியம்மன் கோவிலில் யாகசாலைக்கு பந்தக்கால்

பத்ரகாளியம்மன் கோவிலில் யாகசாலைக்கு பந்தக்கால்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, பத்ரகாளியம்மன் கோவிலில், கும்பாபிேஷகம் நடந்து, 22 ஆண்டுகளான நிலையில், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடபட்டது.கும்பாபிேஷகத்துக்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, விமான கோபுர பாலாலயம் கடந்த பிப்., மாதம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வர்ணம் பூசுதல், சன்னதிகள் புதுப்பிப்பு உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், கோவில் அருகே யாகசாலை அமைப்பதற்காக நேற்று பந்தக்கால் போடும் பணி நடந்தது. விழாவில், கோவில் நிர்வாகத்தினர், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.பந்தக்கால் போடப்பட்டதை தொடர்ந்து, ஒன்பது ேஹாம குண்டங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளன. கும்பாபிேஷக விழா வரும், 28ம் தேதி துவங்குகிறது. நான்கு கால யாக பூஜைகளை தொடர்ந்து, வரும், 30ம் தேதி பத்ரகாளியம்மன் விமான கோபுரம் மற்றும் பரிவார விமானங்களுக்கு, மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி