உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இசைப்பிரியர்களை கவர்ந்த பாண்டிமேளம் கொண்டாட்டம்

இசைப்பிரியர்களை கவர்ந்த பாண்டிமேளம் கொண்டாட்டம்

கோவை;கோவையில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கேரள பாரம்பரிய பாண்டி மேளம் இசை கொண்டாட்ட நிகழ்ச்சி, கிக்கானி பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் கேரள வடசேரி சிவநாராயணன் குட்டி குழுவினர், 50க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் செண்டை, கொம்பு, இலத்தாளம் மற்றும் குழல் இசைக்கருவிகளை கொண்ட இசை முழக்கத்தை நிகழ்த்தி, இசை ரசிகர்களை உற்சாக கொண்டாட்டத்தில் ஆழ்த்தினர். முதல் முறையாக, பாண்டி மேளம் இசைக்கு ஏற்ப, பெண்கள் நாட்டியம் ஆடினர். இசைக்குழு தலைவர் வடசேரி சிவநாராயணன் குட்டி கூறியதாவது: பாண்டி மேளம் கேரளாவின் பாரம்பரிய இசைகளில் ஒன்று. பஞ்சாரி மேளத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பாண்டி என்பது ஏழு அடிகள் கொண்ட தாளத்தைக் குறிக்கிறது. ஒரு முழு நீள பாண்டி மேளம், இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும். கேரளாவில் கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளில், இந்த இசைக்கருவிகளை இசைக்கிறோம். குறிப்பாக, திருச்சூர் பூரம் மற்றும் ஆராட்டுப்புழா பூரம் போன்ற திருவிழாக்களில், இந்த பாரம்பரிய இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சி நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியை, 1,000க்கும் மேற்பட்ட இசைப்பிரியர்கள் பார்த்து, கேட்டு, நடனமாடி ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ