உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா

குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா

அன்னுார்;குமரன் குன்று கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது.குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், 37வது ஆண்டு பங்குனி உத்திர தீர்த்த காவடி திருவிழா இன்று துவங்குகிறது. இன்று மாலை 6:00 மணிக்கு குமரன் குன்று கோவில் அடிவாரத்தில் திருமுருகன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடக்கிறது.இரவு 10:00 மணிக்கு, அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடி குழுவினர் கொடுமுடி புறப்பட்டு செல்கின்றனர். நாளை கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து மகுடேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.வரும் 25-ம் தேதி காலை 5:30 மணிக்கு மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடி குழுவினர் பாதயாத்திரையாக, குருக்கிளையம்பாளையம், பொகலுார் வழியாக குமரன் குன்று செல்கின்றனர். காலை 10:00 மணிக்கு குமரன்குன்று கோவில் வளாகத்தில் தீர்த்த காவடிகளை சமர்ப்பித்து அருள் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து முருகப் பெருமானுக்கு 16 வகை அபிஷேக பூஜை நடக்கிறது; அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 12:00 மணிக்கு கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை