உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை

பொள்ளாச்சி : பள்ளி மாணவர்கள், வாகனம் ஓட்டினால், பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும், என, தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி, சங்கவி வித்யா மந்திர் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தாளாளர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார்.வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் பேசியதாவது:18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே வாகனம் ஓட்ட வேண்டும். வாகன ஓட்டுநர்கள், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களையும், சீட் பெல்ட் அணிந்து கார்களையும் ஓட்ட வேண்டும். குடிபோதையிலும், மொபைல்போனில் பேசியபடியும் வாகனங்களை ஓட்டக் கூடாது. ஆர்.சி., புத்தகம், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் ஆகியவற்றை முறையாக வைத்திருந்தால் மட்டுமே, விபத்தில் பாதிக்கப்படும் போது, உரிய இழப்பீடு பெற முடியும்.தமிழகத்தில், அதிவேகம், அஜாக்கிரதை போன்ற மனிதனின் தவறால் ஆண்டுதோறும், 19 ஆயிரம் பேர் வரை, வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர். பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், சிறை தண்டனையும் விதிக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், இயற்கை நேசி பொது அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ