உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி நகரில், கடைவீதி மற்றும் உடுமலை ரோடு சந்திப்பில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.அவர்களில் சிலர், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளை பார்ப்பதற்காக பிற பகுதிகளில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து, மருத்துவமனை செல்லும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள், வாகன வசதியின்றி தவிக்கின்றனர். ஊஞ்சவேலம்பட்டி மார்க்கமாக இயக்கப்படும் டவுன் பஸ்களில் சென்றாலும், மருத்துவமனை அருகே நிறுத்தம் இல்லாததால், நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு மருத்துவமனைக்கு அருகே பஸ் ஸ்டாப் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.மக்கள் கூறியதாவது:உடுமலை, தாராபுரம் பகுதிகளில் இருந்து வரும் தொலைதுார பஸ்கள், தேர்முட்டியில் நிறுத்தப்படுகின்றன. அதேபோல, 'பிங்கி' தனியார் கடை அருகில் டவுன் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.அதேநேரம், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும், தொலைதுார மற்றும் டவுன் பஸ்கள், தேர்முட்டியில் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. இதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து, மருத்துவமனை செல்லும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.அதற்கு மாறாக, அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் டவுன் பஸ்களை, அரசு மருத்துவமனை அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக கடைவீதிக்கு வரும் மக்களும் பயனடைவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !