உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆள் இறங்கும் குழிகளில் வெளியேறும் கழிவுநீர் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி

ஆள் இறங்கும் குழிகளில் வெளியேறும் கழிவுநீர் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறுவதால், நகரின் சுகாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் துவங்கியது முதல், இதுவரை தினமும் புதிய, புதிய பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால், மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.ஆள் இறங்கும் குழிகள் சேதம், வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதிலும் குளறுபடிகள் என, பல பிரச்னைகள் எழுந்தாலும், இதற்கு தீர்வு இல்லை.எதற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது என மக்கள் கேள்வி எழுப்பும் சூழல் நிலவுகிறது.அதில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம் பாதித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன், அன்சாரி வீதியில் ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வீட்டுக்குள் புகுந்தது. கடும் துர்நாற்றம் வீசியதால், வீட்டில் வசித்தோர் மிகுந்த சிரமப்பட்டனர்.தேர்நிலையம் அருகே உள்ள ஆள் இறங்கும் குழியில் இருந்து, கழிவுநீர் பொங்கி வருகிறது. மழை பெய்யும் போது, கழிவுநீரும் கலந்து ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி - பனிக்கம்பட்டி ரோட்டில் உள்ள ஆள் இறங்கும் குழியில் இருந்து, கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி ரோட்டில் தேங்குவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.கடும் துர்நாற்றத்தால், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு அப்பகுதியை கடந்து செல்லும் சூழல் நிலவுகிறது.இதற்கு தீர்வு காண வேண்டிய நகராட்சி நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது, வேதனையான விஷயமாக மாறியுள்ளது.பல இடங்களில் இந்த பிரச்னை ஏற்பட்டாலும், தற்காலிக தீர்வு மட்டுமே காணப்படுகிறது. நிரந்தர தீர்வை ஏற்படுத்த இரண்டு துறை அதிகாரிகளும் இணைந்து ஆலோசிக்க வேண்டும்.வீட்டு இணைப்புகள் முழு அளவில் கொடுக்கப்படாமல் உள்ள சூழலிலே, இந்த அவல நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், இப்பிரச்னைக்கு தற்போது தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ