உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எப்.எல்.,2 மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மனு

எப்.எல்.,2 மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மனு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, வடக்கிபாளையம் பிரிவில், தனியார் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், எப்.எல்.,2 எனும் தனியார் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. வருவாயைப் பெருக்க நினைக்கும் அரசியல் கட்சியினரே இத்தகைய தனியார் மதுபானக் கடைகளை எளிதாக துவக்கி வருகின்றனர்.அவ்வகையில், ஆச்சிப்பட்டி ஊராட்சியில், வடக்கிபாளையம் பிரிவில், தனியாரால் புதிதாக மதுபானக் கடை திறக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யாவிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:ஆச்சிப்பட்டி ஊராட்சி வடக்கிபாளையம் பிரிவில், தனியார் மதுபானக் கடை, 'பார்' வசதியுடன் திறக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, குடியிருப்பு பகுதி, பஸ் ஸ்டாப் மற்றும் திருமண மண்டபம் அருகே மதுபானக் கடை அமைக்கப்படுகிறது.இங்கு, தினமும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் என, நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வர். அருகே, தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. எனவே, மதுபானக் கடை திறந்தால் மக்கள் பாதிப்படைவர்.வாகன விபத்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனியாரால் திறக்கப்படும் மதுபானக் கடைக்கு அனுமதி வழங்க கூடாது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை