உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுகளை சீரமைக்க கோரி மக்கள் மனு

வீடுகளை சீரமைக்க கோரி மக்கள் மனு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆழியாறு புளியங்கண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் பவுலினா மற்றும் பொதுமக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.அதில், புளியங்கண்டியில், 72 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள, 41 தொகுப்பு வீடுகள் கடந்த, 2000ம் ஆண்டு வனத்துறையால் கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது, வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.வீடுகளில் வசிக்கும் மக்கள், உயிர் பயத்திலேயே வாழும் நிலை உள்ளது. தற்போது மழை தொடர்ந்து பெய்யும் நிலையில், வீடுகளில் தண்ணீர் கசிந்து இடையூறு ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை