உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் தேர் அருகே இறைச்சி கழிவுகளை வீசியவர் கைது

கோவில் தேர் அருகே இறைச்சி கழிவுகளை வீசியவர் கைது

கோவை:கோவை, போத்தனுாரை சேர்ந்தவர் முகமது அயாஸ், 41. இவரது சகோதரர் முகமது வாஸ், காந்தி பார்க் அருகே ஆடு இறைச்சி கடை நடத்துகிறார். இந்நிலையில், கடந்த, 1ம் தேதி இரவு இக்கடையின் ஆடு, கோழி இறைச்சி கழிவுகளை ராஜவீதி அருகே கோனியம்மன் கோவில் தேர் நிறுத்தும், தேர்நிலை திடல் அருகே வீசி சென்றார்.மறுநாள் மாநகராட்சி துாய்மை பணியாளர்களை கொண்டு போலீசார் அவற்றை அகற்றினர். இதுபோல அடிக்கடி நடந்ததால், ஹிந்து அமைப்பினர் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு, இறைச்சி கழிவுகளை வீசியவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து அங்குள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த முகமது அயாஸ், இறைச்சி கழிவுகளை தேர் நிலை திடல் அருகே வீசி சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ