உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுப் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு

பொதுப் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு

அன்னுார்:காளக்குறிச்சியில் கோவிலுக்கு செல்லும் பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.அன்னுார் தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் அளித்த மனு : பசூர் ஊராட்சி, காளக்குறிச்சியில் பழமையான மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் பொது பாதையை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மழை பெய்யும் சமயங்களில், இந்த பொதுப் பாதை நீர்வழிப் பாதையாகவும் பயன்படுகிறது. ஆக்ரமிப்பால் மழை நீர் செல்வதும் தடைபடுகிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு குறித்து கோவை கலெக்டர் அலுவலகம், வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் அன்னுார் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஓராண்டாக மனு கொடுத்து வருகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ