உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலிப்பணியிடங்களை நிரப்ப பா.ஜ.,வினர் கலெக்டரிடம் மனு

காலிப்பணியிடங்களை நிரப்ப பா.ஜ.,வினர் கலெக்டரிடம் மனு

வால்பாறை;வால்பாறை அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, பா.ஜ., சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வால்பாறை பா.ஜ., மண்டல பார்வையாளர் தங்கவேல், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை அரசு மருத்துவமனையில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. மருத்துவமனை முதல் தளத்தில், ரத்த பரிசோதனை மையம் செயல்படுவதால், வயதானவர்கள் படி ஏறி செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, கீழ் தளத்துக்கு பரிசோதனை மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். காலியாக உள்ள டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். பழைய கட்டத்தை நோயாளிகள் நலச்சங்க கூட்ட அரங்காக மாற்றி, மாதம் தோறும் நோயாளிகள் குறைகளை கேட்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை