உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளர்கள் கலெக்டர் ஆபீசில் மனு

துாய்மை பணியாளர்கள் கலெக்டர் ஆபீசில் மனு

கோவை:ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:மூன்று முதல், 20 ஆண்டுகளுக்கு மேலாக, துாய்மை பணியாளர்களாக பணிபுரிகிறோம். பகுதி நேர வேலையை, காலை, 6:00 முதல் மதியம், 2:00 மணி வரை என நேரத்தை வரையறை செய்து தர வேண்டும்.தற்போது வெயில் காலமாக இருப்பதால், கோவை மாநகராட்சியில் நடைமுறையில் இருப்பதை போல், காலை 6:00 முதல் மதியம், 12:00 மணி வரை மட்டும் பணியாற்ற அனுமதி தர வேண்டும். பணித்தள பொறுப்பாளர்களாக இருப்பவர்கள், எங்களை கொத்தடிமை போல் நடத்துகிறார்கள்.அவர்களுக்கு பதிலாக, நிரந்தர பணியாளர்களாக உள்ள அலுவலக உதவியாளர்கள் அல்லது மேற்பார்வையாளர்களை நியமித்து, எங்கள் பணிகளை மேற்பார்வையிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி