உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உடல் ஆரோக்கியம் மாரத்தான் ஓடி விழிப்புணர்வு

உடல் ஆரோக்கியம் மாரத்தான் ஓடி விழிப்புணர்வு

அன்னுார்;கணேசபுரத்தில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, நடந்த மாரத்தான் ஓட்டத்தில், 500 பேர் பங்கேற்றனர்.கணேசபுரத்தில், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மாரத்தான் ஓட்டம், பேரூர் அடிகளார் மருத்துவமனை முன்பு நேற்று நடந்தது. பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் கல்லுாரியும், இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் என 500 பேர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். முதலிபாளையம்- காட்டம்பட்டி சாலையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராதீனம் மருதாசல அடிகளார், கோப்பைகள், பதக்கம் மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார்.சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்