| ADDED : ஜூன் 09, 2024 12:32 AM
கோவை:கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும், இன்டெக் 2024 கண்காட்சியில், பண்ணாரியம்மன் தொழில்நுட்ப கல்லுாரியின் மாணவர்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான ரோபோக்களை வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு இடத்திற்கு எத்தனை பேர் வருகின்றனர், செல்கின்றனர் என்பதை கணக்கிட்டு, உடனுக்குடன் குறுஞ்செய்தியாக அனுப்பும் கேமரா அமைப்பை உருவாக்கியுள்ளனர்.இவர்கள் தயாரித்த ஒரு பயர்வால் சாப்ட்வேர், ஒரு நிறுவனத்திற்குள் நிகழும் தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்கிறது. வேறு நிறுவனங்களுக்கு, இந்த நிறுவனத்தின் தகவல்களை கசிய விடாமல் தடுக்கிறது. யாரேனும் தகவல்களை வேறு ஒரு நிறுவனத்துக்கோ, வேறு ஒருவருக்கு தகவல் அனுப்ப முயற்சித்தாலோ, காட்டிக் கொடுத்து விடும்.அதிநவீன ஐஓடி எனப்படும் இன்டெர்நெட் ஆப் திங்க்ஸ், பயன்படுத்தும் சர்க்யூட்களையும் வடிவமைத்துள்ளனர். இவற்றை காட்சிப்படுத்துவதோடு, விளக்கமும் தருகின்றனர்.