உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறு சோதனைச்சாவடியில்  வாகன நெரிசலை தவிர்க்க திட்டம் 

ஆழியாறு சோதனைச்சாவடியில்  வாகன நெரிசலை தவிர்க்க திட்டம் 

ஆனைமலை;ஆனைமலை அருகே ஆழியாறு சோதனைச்சாவடியில் வாகன நெரிசலை தவிர்க்க, 'பாஸ்ட் டேக்' வாயிலாக, நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.மற்ற நாட்களை விட, விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சுற்றுலாப்பயணியர் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதிலும், ஆழியாறு கவியருவி மற்றும் வால்பாறைக்கு செல்லவும் சுற்றுலாப்பயணியர் அதிகளவு ஆர்வம் காட்டுவதால், வனத்துறை சோதனைச்சாவடியில் அவ்வப்போது நெரிசல் ஏற்படும்.வாகனங்கள் வரிசையாக நின்று, நுழைவு கட்டணம் செலுத்திய பின்னரே செல்ல வேண்டிய நிலை இருந்தது. சுற்றுலா பயணியர், சிலர் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழலால் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.தற்போது, வனத்துறை வாயிலாக, சுற்றுலா வாகனங்களுக்கு, 'பாஸ்ட் டேக்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாகனங்கள், ஸ்கேன் செய்த பின்னர், விபரங்கள் கேட்டறிந்து அனுப்பப்படுகின்றன. இதனால், வாகன நெரிசல் குறையும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி