சூதாட்டம்; 11 பேர் கைது
ஆனைமலை - வால்பாறை ரோட்டில், ஆனைமலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பணம் வைத்து சீட்டு விளையாடிய, ஆனைமலையை சேர்ந்த வேலுசாமி,40, ரமேஷ்,40, கோபாலகிருஷ்ணன்,32, கண்ணப்பன்,41, ஐயப்பன், 56, முத்து, 47, குமார், 41, மணிகண்டன், 35, சோமந்துறைசித்துாரை சேர்ந்த முத்துராஜ்,34, இமானுவேல், 28, ராஜேந்திரன்,42, ஆகிய 11 பேரை கைது செய்த போலீசார், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற ஒருவர் கைது
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பொள்ளாச்சி - ஆழியாறு ரோட்டில், பேரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம்,48, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஒரு கிலோ, 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகையிலை விற்றவர் கைது
நெகமம், வடசித்துாரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்குள்ள பெட்டி கடைகளில் சோதனை செய்த போது, சக்திவேல், 58, என்பவரின் பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானது.இதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், 18 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.