கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வீரப்பகவுண்டனூரில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா நாளை நடக்கிறது.கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்பகவுண்டனூர், வெள்ளையம்மன் பொம்மியம்மன் உடனமர் மதுரைவீரன் மற்றும் பட்டத்தரசி அம்மன் கோவிலில், பூச்சாட்டு திருவிழா கடந்த, மே மாதம், 27ம் தேதி, முனியப்பன் சுவாமிக்கு சிலை வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.அதன்பின், 28ம் தேதி, நோன்பு சாட்டுதல் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த, 3ம் தேதி, விநாயகருக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 4ம் தேதி, சுவாமிக்கு பூவோடு எடுத்தல், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.கடந்த, 5ம் தேதி, சுவாமி சிலைகள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் மற்றும் சக்தி கரகம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று 6ம் தேதி, காலை 11:00 மணிக்கு, சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, 7ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடக்கிறது.