உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செஞ்சேரி ரோட்டில் பள்ளம் சீரமைப்பு: வேகத்தடை அமைப்பது அவசியம்

செஞ்சேரி ரோட்டில் பள்ளம் சீரமைப்பு: வேகத்தடை அமைப்பது அவசியம்

உடுமலை : உடுமலை அருகே, நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்த பள்ளம் 'தினமலர்' செய்தியால் சீரமைக்கப்பட்டுள்ளது; அவ்விடத்தில், வேகத்தடை அமைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஏரிப்பாளையம் அருகே, செஞ்சேரிமலை ரோட்டில், நான்கு வழிச்சாலை குறுக்கிடுகிறது. அங்கு உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு, இருபுறங்களிலும், அணுகுசாலை ஏற்படுத்தப்பட்டது.இப்பணிகளால், பாலத்தின் மறுபுறத்தில் செஞ்சேரிமலை ரோடு பள்ளமாக மாறியது; செங்குத்தாக கீழிறங்கும் பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டது.மண் அரிப்பால், செங்குத்து பகுதியில் பள்ளம் ஏற்பட்டு, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வந்தனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில், 'செஞ்சேரி ரோட்டில் செங்குத்து பள்ளம்,' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.இதையடுத்து, தற்காலிக தீர்வாக நெடுஞ்சாலைத்துறையினர், கிராவல் மண் கொட்டி, பள்ளத்தை முழுமையாக சீரமைத்துள்ளனர். இதனால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அச்சமின்றி அவ்வழியாக செல்ல முடிகிறது. மண் கொட்டப்பட்ட இடத்தில், தார் சாலை அமைப்பது அவசியமாகும்.

இதையும் அமைக்கணும்

நான்கு வழிச்சாலைக்குரிய அணுகுசாலையில், மேற்குப்பகுதியில் இருந்து அதிவேகமாக வாகனங்கள் வருகின்றன. அப்போது, செஞ்சேரிமலை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் மேடான பகுதியில் ஏறி, கடக்க வேண்டியுள்ளது.அப்போது, அணுகுசாலையில் வரும் வாகனங்கள் வருவது தெரியாமல், விபத்துகள் ஏற்படுகிறது.அணுகுசாலையில் வாகனங்கள் வேகத்தை குறைக்க அறிவிப்புகள் வைக்கப்பட்டும் பலனில்லை. எனவே, சந்திப்பு பகுதியில், அணுகுசாலையின் இருபுறங்களிலும் வேகத்தடை அமைத்தால், விபத்துகளை தவிர்க்க முடியும்.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை