உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருணை காட்டுவாரா வருணன் கழுத்தளவு தண்ணீரில் ஜெபம்

கருணை காட்டுவாரா வருணன் கழுத்தளவு தண்ணீரில் ஜெபம்

கோவை:நாதேகவுண்டன்புதுார் ஸ்ரீ கால சம்ஹாரீஸ்வர பைரவர் கோவிலில், மழை பொழிய வேண்டி,11 புனித தீர்த்த கலசங்கள் வைத்து கழுத்தளவு தண்ணீரில் அமர்ந்து சிவாச்சாரியர்கள் சிறப்பு வருண ஜெபம் மேற்கொண்டனர்.ஆலாந்துறை அருகே, நாதேகவுண்டன்புதூர் ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடம் அன்னதான மடாலயத்தில் கொங்குகாசி அஷ்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது. குரோதி ஆண்டு, முதல் தேய்பிறை அஷ்டமி பூஜையும், குருபெயர்ச்சி யாகமும், வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைய சிறப்பு பிரார்த்தனையும் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காசி, கங்கா, ரிஷிகேஷ், ஹரித்துவார், ராமேஸ்வரம், கொடுமுடி, கூடுதுறை, நொய்யலாறு, வெள்ளிங்கிரி ஆகிய புனித ஸ்தலங்களில் இருந்து, ஒன்பது புனித நதி தீர்த்தங்கள் கலசத்தில் சேர்த்து, வருண ஜெபம் செய்யப்பட்டது.பிறகு புனித கலச தீர்த்தங்கள் ஒன்பதரை அடி உயரம் கொண்ட எட்டு காலசம்ஹார பைரவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தேய்பிறை அஷ்டமி, குருபெயர்ச்சி, மழை வேண்டி நடக்கும் வருண ஜெபம் உள்ளிட்ட யாக பூஜைகளில் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பங்கேற்று, வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை