உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள், பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.* காரமடை அருகே உள்ள எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய, 144 பேரும் தேர்வு பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். யுதிக்சா 493, ஜீவிகா 492, வர்ஷா 491 மதிப்பெண்கள் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் பழனிசாமி, செயலாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் சசிகலா, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், நிர்வாக அலுவலர் சிவ சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர். * காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் தேர்வு பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிரித்திகா ஸ்ரீ 489, பிரநீத் 488, கவுதம் 486 ஆகியோர் மதிப்பெண்களை பெற்று, முதல் மூன்று இடங்களை பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயகண்ணன், பள்ளி முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். * மேட்டுப்பாளையம் அருகே மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய, 159 மாணவ, மாணவியரும் தேர்வு பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். சாய் சங்கர்சனா 497, லையாஸ்ரீநிதி, ஹரிணி ஆகிய இரண்டு மாணவிகள் தலா 494, சங்கமித்ரா 493 மதிப்பெண்கள் பெற்று, முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை