உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 4 கவிஞர்களுக்கு சிற்பி இலக்கிய விருது விழாவில் இரு நுால்கள் வெளியீடு

4 கவிஞர்களுக்கு சிற்பி இலக்கிய விருது விழாவில் இரு நுால்கள் வெளியீடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், 29ம் ஆண்டு சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா நடந்தது. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் வரவேற்றார்.கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், 'இன்றைய தலைமுறையினர் கலை, இலக்கியம், கவிஞர்கள் போன்ற எதையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.கவிஞர் சிற்பி உள்ளிட்ட பேராசிரியர்கள் தமிழை தேர்வுக்காக நடத்தவில்லை. தமிழ் பேராசிரியர்கள், தமிழின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஆர்வத்தோடு கற்றால் மதிப்பெண்கள் தானாக வரும்.புதுடில்லியில் உள்ள இந்தியன் இன்டர்நேஷனல் சென்டர் போன்று, பொள்ளாச்சியில், குளோபல் அகாடமிக் வில்லேஜ், 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்க வேண்டும் என்பது அருட்செல்வரின் கனவாகும்,'' என்றார்.கவிஞர் நந்தலா பேசுகையில், ''மனித மனங்களை கழுவ இலக்கியங்களால் மட்டுமே முடியும். இன்றைய சூழலில் விரிந்த பார்வைக்காக இலக்கியங்களை படிக்க வேண்டும். படைப்பாளிகள் காலத்திற்கேற்ப மொழியை புதுப்பிக்கின்றனர். இலக்கியம் மட்டுமே வாழ்க்கையில் ரசிக்க கூடிய பகுதிகளை சொல்லி கொடுக்கும். எனவே, அனைவரும் இலக்கியத்தை படியுங்கள்,'' என்றார்.அறிமுக உரையை, கவிஞர்கள் அம்சபிரியா, பூபாலன் வழங்கினர். தொடர்ந்து, கவிஞர் சிற்பியின், 'நறிவிலி' என்ற நுாலும், அவர் மொழி பெயர்த்த, 'உழவனின் பாடல்' நுால்கள் வெளியிடப்பட்டன.கவிஞர்கள் பிருந்தாசாரதி, வசந்தகுமார், அமுதபாரதி, அருள் ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது, கேடயம் மற்றும் ரொக்க பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. கவிஞர் ஜெயக்குமாருக்கு சிற்பி இலக்கிய பரிசும், மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் குருமூர்த்திக்கு பதிப்பியல் வித்தகர் விருத்தும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் ஏற்புரை வழங்கினர். கவிஞர் கிருங்கை சேதுபதி நன்றி கூறினார்.கல்லுாரி நிர்வாக மேலாளர் ரகுநாதன், முன்னாள் முதல்வர் முத்துக்குமரன், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தமிழ் இலக்கிய துறை தலைவர் ராஜ்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை