உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கோலாகலம்

புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கோலாகலம்

கோவை;புலியகுளத்தில் உள்ள அந்தோணியார் தேவாலய தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி கோவை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, சிறப்பு நவநாள் திருப்பலி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அருட்பணியாளர்கள் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றினர். திருவிழா நாளான நேற்று, கோவை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திவ்ய நற்கருணை மற்றும் உறுதி பூசுதல் ஆகிய அருட்சாதங்கள் வழங்கப்பட்டன. கூட்டுப்பாடற் மற்றும் திருப்பலியில் புலியகுளம் பங்குத்தந்தை அருண், உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நேற்று மாலை, திருப்பலி மற்றும் ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில் அந்தோணியார் தேர், சூசையப்பர் தேர், சகாய மாதா தேர், பனிமய மாதா தேர், அன்னை தெரசா தேர், மிக்கேல் அதிதுாதர் தேர், இருதய ஆண்டவர் தேர், பூண்டி மாதா தேர், செபமாலை மாதா தேர், பெரியநாயகி மாதா தேர், வேளாங்கண்ணி மாதா தேர், குழந்தை இயேசு தேர், செபஸ்தியார் தேர், புனித தெரசா தேர், காணிக்கை மாதா தேர் என 15 தேர்கள் இடம் பெற்றன. அந்தோணியார் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர், ரெட்பீல்டு, புலியகுளம் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்து சேர்ந்தது. தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி