உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே ஊழியரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு

ரயில்வே ஊழியரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே ரயில்வே ஊழியரை தாக்கி செல்போன், பணத்தை பறித்துச் சென்ற கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் காட்டூர் அருகே ரயில்வே காலனியை சேர்ந்தவர் உத்தம் குமார் ராம், 31. இவர் ரயில்வே துறையில், மெக்கானிக்கல் டெக்னிசியனாக பணி புரிந்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் பின்புறம் உள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே நண்பர்களுடன் நின்றுள்ளார். அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்து, உத்தம் குமார் ராமை மிரட்டி இங்கு நிற்க கூடாது என கூறியுள்ளனர்.பின் உத்தம் குமார் ராமை, தாக்கி ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போன், இருசக்கர வாகன சாவி, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.இதுகுறித்து உத்தம் குமார் ராம் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை