உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மழை

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மழை

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நேற்று நாள் முழுவதும், தொடர்ந்து சாரல் மழை பெய்ததால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. இந்தாண்டு, கோடை உழவில், தக்காளி மற்றும் சின்னவெங்காயம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை, இடைவிடாது சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்தது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை