| ADDED : ஆக 21, 2024 11:48 PM
பொள்ளாச்சி : முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ், 80வது பிறந்த தினத்தை காங்., கட்சியினர் நேற்று கொண்டாடினர். அவரது படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியினர் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி தலைவர் பகவதி தலைமை வகித்தார். தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினர் முத்து, காங்., நகரத்தலைவர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* வால்பாறை நகர காங்., கட்சி சார்பில் நடந்த விழாவில், தலைவர் அமீர் தலைமை வகித்தார். காங்., கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பேபி, முன்னாள் பிரதமர் ராஜிவ் படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம், செயல்தலைவர்கள் கார்த்திக், ஈஸ்டர்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.