உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமானுஜர் அவதார திருநாள் விழா

ராமானுஜர் அவதார திருநாள் விழா

அன்னுார்:அன்னுார், பெருமாள் கோவிலில், ராமானுஜர் அவதார திருநாள் விழா நேற்று நடந்தது. வைஷ்ணவத்தை அழிவிலிருந்து காப்பாற்றி, உலகெங்கும் தழைக்கச் செய்தவர், இந்து சமய வரலாற்றில் சிறப்பான இடம் பிடித்தவர். ஹரிஜனங்களை ஆலய பிரவேசம் செய்து புரட்சி செய்தவர் ஸ்ரீ ராமானுஜர். சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தன்று, அவரது அவதார திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை 6:30 மணிக்கு, ராமானுஜர் அவதார திருநாளை முன்னிட்டு ஸ்வக்சேனா ஆராதனை, புண்ணிய வாசனம், ஹோமம் நடந்தது. இதைத் தொடர்ந்து, ராமானுஜருக்கு, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை