உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

போத்தனூர்;மலுமிச்சம்பட்டியிலிருந்து போடிபாளையம் செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று மாலை இங்குள்ள கல்வெர்ட்டின் கீழ் பகுதியில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியே சென்றோர் பார்த்தபோது, ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரிந்தது. தகவலறிந்த மதுக்கரை போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, கழுத்து எலும்பு உடைந்த நிலையில் சடலம் காணப்பட்டது. சடலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர், சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையம், ராசடி ராமசாமி கோனார் வீதியை சேர்ந்த மதுரவன், 36 என்பது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை