உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருமண மண்டபங்களை சேவை பிரிவுக்கு மாற்றிட கோரிக்கை

திருமண மண்டபங்களை சேவை பிரிவுக்கு மாற்றிட கோரிக்கை

கோவை;தமிழ்நாடு கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின், 6ம் ஆண்டு துவக்க விழா, மாநில மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம், வரதராஜபுரத்தில் நேற்று நடந்தது.கூட்டமைப்பு மாநில தலைவர் சிங்கை முத்து தலைமை வகித்தார். சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயராமன் விழாவை துவக்கிவைத்தார்.இதில், 'இனி இந்த கூட்டமைப்பானது, 'தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற பெயரில் இயங்கும். கூட்டமைப்பின் செயல்பாடுகளை விரிவாக்கிடவும், மென்மேலும் வலுவாக அமைத்திடவும், மாநில கூட்டமைப்பு நிர்வாகிகளின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்படுகிறது.திருமண மண்டபங்களை வணிக நிறுவனங்களாக கருதாமல், அவற்றை சமுதாய மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களாக கருதி, சேவை பிரிவுக்கு அரசு மாற்றிட வேண்டும். கட்டட அனுமதி, போலீஸ் அனுமதி, உரிமம் போன்றவற்றில் கட்டுப்பாடுகளை எளிதாக்கி, உரிய விலக்கு அளிக்க வேண்டும். ஆண்டுக்கு, 40 முதல், 50 நிகழ்ச்சிகள் மட்டுமே நடக்கும் நிலையில், திருமண மண்டபங்களுக்கு சொத்துவரி விதிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிச்சுமையை குறைக்க வேண்டும். திருமண மண்டபங்களுக்கு, தொழில் வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து, கூட்டமைப்பின் வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டது. குமரி மாவட்ட பொதுச் செயலாளர் சிதம்பர தாணு, திருப்பூர் மாவட்ட சங்க தலைவர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ