உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

ஆனைமலை : ஆனைமலை அருகே, தனியார் தோட்டத்தில், 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினர், வனப்பகுதியில் விட்டனர்.ஆனைமலை அருகே, ஆழியாறு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலுச்சாமி என்பவர், வழக்கம் போல அன்றாட பணிகளை மேற்கொண்டார். அப்போது, அங்கு மலைப்பாம்பு ஒன்று ஓலைகளுக்கு இடையே தென்பட்டது.அதிர்ச்சியடைந்த அவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பின், அடர்ந்த வனப்பகுதிக்குள் மலைப்பாம்பை பாதுகாப்பாக விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை