உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார் அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் புகார்

பார் அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் புகார்

உடுமலை : குறிச்சிக்கோட்டையில், தனியார் 'பார்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியம் குறிச்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன், தனியார் 'பார்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:உடுமலை ஒன்றியம், குறிச்சிக்கோட்டையில், தனியார் ஓட்டலில் 'பார்' அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.அருகிலேயே பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. ஏற்கனவே அப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது; அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, தனியார் பார் அமைக்க அனுமதி அளிக்க கூடாது.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை