உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓய்வு பெற்ற மின் ஊழியருக்கு போக்சோ வில் 20 ஆண்டு சிறை

ஓய்வு பெற்ற மின் ஊழியருக்கு போக்சோ வில் 20 ஆண்டு சிறை

கோவை : போக்சோ வழக்கில், ஓய்வு பெற்ற மின் ஊழியருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன்,78. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக, கடந்த பிப்., 13ல், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு, 20 ஆண்டு சிறை, 10,000 ஆயிரம் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், சம்பவம் நடந்து ஐந்து மாதங்களில் விசாரணை நடத்தி, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ