உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

பெ.நா.பாளையம்:கோவை மேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணறு பிரிவு அருகே மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோயம்புத்தூர் சாலைகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோயமுத்தூர் சாலைகள் பாதுகாப்பு சங்கம் நெடுஞ்சாலை துறை அனுமதி பெற்று கடந்த, 14 ஆண்டுகளாக கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம் முதல் தொப்பம்பட்டி பிரிவு வரை மரங்களை வைத்து பராமரித்து வருகிறது. நேற்று முன்தினம், வெள்ளக்கிணறு பிரிவு அருகே கோயம்புத்தூர் சாலைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நட்டு, கடந்த, 14 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த மரங்களை அப்பகுதியில் புதிதாக கட்டடம் கட்டி வரும் நபர்கள் வெட்டி அகற்றினர்.இது குறித்து கோயம்புத்தூர் சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும், 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. அதற்காக அரசு துறையினர் பல்வேறு இடங்களில், மரங்களை வைத்து பராமரித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என, கூறியிருந்தது. ஆனால், மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒரு சில தனியார் அமைப்பினர், தங்களது கடைகள், வணிக வளாகங்கள் மக்களின் பார்வைக்கு பட வேண்டும் என்று சாலையில் உள்ள மரங்களை உரிய அனுமதி இன்றி, வெட்டி வீழ்த்தி வருகின்றனர். இவ்வாறு மரங்களை வெட்டி அழிக்கும் நபர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை துறையினர், கோவை மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ