உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொள்ளை விலை முத்திரைத்தாள்

கொள்ளை விலை முத்திரைத்தாள்

கோவை:கோவை கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வெளியே உள்ள விற்பனை மையங்களில், 100 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள், 300 ரூபாய்க்கு விற்பதாக வந்த தகவலையடுத்து, கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முத்திரைத்தாள்களுக்கு, அரசு நிர்ணயித்துள்ள கமிஷன் தொகை அல்லது அதற்கு சற்று கூடுதல் தொகை வைத்து, முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் விற்பனை செய்வது வழக்கம். ஆனால் அதைத்தாண்டி, இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், 100 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள், 300 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், கலெக்டருக்கு புகார் வந்தது.விரிவான விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை