உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு நிர்வாக அதிகாரிக்கு ரோட்டரி சங்கம் விருது

நேரு நிர்வாக அதிகாரிக்கு ரோட்டரி சங்கம் விருது

கோவை:ரோட்டரி கிளப் கோயம்புத்துார் ஜெனித் சங்கத்தின் சார்பில், நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாருக்கு, 'தொழிலில் மேன்மை பொருந்தியவர்' விருது வழங்கப்பட்டது.கல்விப்பணியில் தொடர்ந்து சாதனை புரிந்து, மாணவர்களின் மூலம் தேசத்தை வளர்ச்சியடைச் செய்து வருவதற்காக, இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.விழாவில், சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3201 ரோட்டரி சங்கத்தின் கவர்னர் சுந்தரவடிவேலு பங்கேற்றார். ரோட்டரி சங்கத்தை சேர்ந்த வித்ய பிரகாஷ், கோகுல்ராஜ், முரளி, மீனா, சுரேஷ்குமார், தமிழரசன் மற்றும் நேரு விமானவியல் கல்லுாரியின் டீன் பாலாஜி பங்கேற்றனர்.நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நாகராஜா, நிதித் துறை மேலாளர் சந்திரன் மற்றும் கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றுவாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ