உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரடு, முரடான ரோடு; சீரமைப்பது யாரு?

கரடு, முரடான ரோடு; சீரமைப்பது யாரு?

வால்பாறை : வால்பாறையிலிருந்து சோலையாறுடேம், மளுக்கப்பாறை பிரிவு வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடு போடப்பட்டுள்ளது.சோலையாறுடேமில் இருந்து ேஷக்கல்முடி செல்லும் ரோடு, பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக, சோலையாறுநகரில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு ரோடு மிக மோசமாக உள்ளது.நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என, மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சோலையாறுநகர் பகுதியிலிருந்து ஒரு கி.மீ., துாரம் வரையிலான ரோடு, மின்வாரியத்திற்கு சொந்தமானதாகும். அதே போல் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிக்கு செல்லும், அரை கி.மீ., துாரம் உள்ள ரோடு, பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதாகும்.இந்த இரு ரோடுகளையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நகராட்சி வசம் ஒப்படைத்தால், உடனடியாக ரோடு சீரமைக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி