உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.டி.ஓ., வாகன சோதனை ரூ.20 லட்சம் அபராதம் வசூல்

ஆர்.டி.ஓ., வாகன சோதனை ரூ.20 லட்சம் அபராதம் வசூல்

கோவை:கோவையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில், 35 வாகனங்களின் தகுதிச்சான்று (எப்.சி.,) தகுதியிழப்பு செய்யப்பட்டது. 20 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். 230 வாகனங்களுக்கு ஆய்வு மேற்கொண்டதற்காக ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டது. 34 வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி சென்றது, 27க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றது. பர்மிட் இன்றி சென்ற, 9 வாகனங்கள், வரிசெலுத்தாமல் சென்ற, 14 வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காமல் சென்ற, 27 வாகனங்கள், சாலை வரி செலுத்தாமல் சென்ற, 35 வாகனங்கள், ஆர்.சி.இல்லாமல் சென்ற, 6 வாகனங்கள்,பிற விதிமுறைகளை மீறிய, 188 வாகனங்கள் என்று மொத்தம், 230 வாகனங்களுக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறி சென்ற வாகனங்களிடமிருந்து ரூ.19 லட்சத்து 9 ஆயிரத்து 305 வசூலிக்கப்பட்டது.இது குறித்து கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன் கூறுகையில், ''கோவை சரகத்திற்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.,) மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் சார்பில் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. ் சுமார் 20 லட்சம் ரூபாய் அபராதமாக வாகன உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இது போன்ற வாகன சோதனை தொடரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ